கொண்டைக்கடலையை வேரோடு பிடுங்கி சாப்பிட்ட 7 வயது சிறுவனை அடித்து கொன்ற 12 வயது சிறுவன்.!



Madhya Pradesh 12 Aged Child Boy Kills 7 Aged boy

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹாண்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயி, தனது விவசாய நிலத்தில் கொண்டைக்கடலை பயிரிட்டுள்ளார். பயிர் பாதி பருவத்துக்கு வந்துவிட்ட நிலையில், விவசாயி தனது 12 வயது மகனை காவலுக்கு வயலில் இருக்க வைத்துள்ளார்.

சிறுவன் தனது விவசாய நிலத்தில் காவல் இருந்து வந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் கொண்டைக்கடலையை வேருடன் பிடுங்கி, கடலையை திண்டுகொண்டு இருந்துள்ளான். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த 12 வயது சிறுவன், 7 வயது சிறுவனை சரமாரியாக தாக்கி இருக்கிறான்.

படுகாயத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் மயங்கி விழவே, அவனை 12 வயது சிறுவன் எழுப்ப முயற்சித்தும் பலனில்லை. இதனால் பதறியபடி வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல இருந்துள்ளன. மறுநாளும் தோட்டத்திற்கு செல்கையில் சிறுவன் மயங்கி இருந்துள்ளான். 

Madhya pradesh

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தகவலை தெரிவிக்கவே, அவர்கள் காவல் துறையினருக்கு விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் சிறுவன் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, 12 வயது சிறுவனை கைது செய்த அதிகாரிகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.