அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
மருத்துவராகும் இலட்சியத்துடன் இருந்த 17 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்; பெற்றோர் கண்ணீர்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் யக்ஷவி ப்ரஹ்மணே. இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று முடித்துள்ளார்.
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட யக்ஷவி, நீட் தேர்வுக்காகவும் தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி சம்பவத்தன்று தான் பயின்று வரும் பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்ட நிர்வாகத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளின் விசாரணைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.