பாம்பு தீண்டி நிமிடத்தில் மயங்கி உயிரிழந்த இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. கைகளில் பிடித்தபடி நடந்த சோகம்.!



madhya-pradesh-indore-snake-catcher-manish-died-snake-b

 

பாம்பு பிடிப்பவர்கள் பாம்பு தன்னை என்ன செய்துவிடும் என அலட்சியமாக செயல்பட்டால் நடக்கும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர், மாவட்டம், டேலி கேதா கிராமத்தை சேர்ந்த இளைஞர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவரின் கைகளில் இருந்த நாகம் ஒன்று, ஓட்டுனருக்கு பின் அமர்ந்துகொண்டிருந்த இளைஞரை கையில் தீண்டியுள்ளது. 

பயந்துபோன அவர் பாம்பை கையில் பிடித்தவாறு நண்பரும் தெரிவிக்க, அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பாம்பை பின்னால் இருந்தவர் கைக்குள் பிடித்து இருந்ததால், பாம்பு பயத்தில் தனது உச்சபட்ச ஆத்திரத்தை வெளிப்படுத்தி இளைஞரை கடுமையாக தீண்டி இருக்கிறது. 

இதனால் நிலைகுலைந்துபோன இளைஞர், வாகனத்தில் இருந்து இறங்க இயலாமல் சரிந்து விழுந்தார். பின், எழுந்து நிற்க முயற்சித்தபோது, விஷத்தின் வீரியத்தால் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

விசாரணையில், பலியான இளைஞர் பாம்புகளை பிடிக்கும் மனிஷ் என்பது தெரியவந்தது. அவர் சம்பவத்தன்று வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க வந்த அழைப்பின் பேரில் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். 

அங்கு பாதுகாப்பற்ற முறையில் பாம்பை கண்டறிந்து பிடித்துவிட்டாலும், அதனை வனப்பகுதியில் விட்டுவிடலாம் என கைகளிலேயே பிடித்து கொண்டு சென்றதாக தெரியவருகிறது. 

அப்போதுதான் வழியில் பாம்பு மனிஷை தீண்டி இருக்கிறது. அவர் தனது நண்பரிடம் தெரிவித்த நிலையில், உடனடியாக வாகனம் நிறுத்தப்பட்டாலும் பாம்பின் விஷம் மனிஷை உயிரிழக்கவைத்துள்ளது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது.