மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கால்வாய்க்குள் கார் பாய்ந்து சோகம்: 28 வயது இளம்பெண், 3 வயது குழந்தை நீரில் மூழ்கி பரிதாப பலி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் பகுதியில், கார் கால்வாய்க்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 28 வயது இளம்பெண் ஆகாஷ், 3 வயது குழந்தை மஹி ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
கார்கோன் மாவட்டத்தில் உள்ள பட்வஹ் பகுதியில் உள்ள பஞ்சவதி கால்வாயை ஒட்டிய சாலையில், நேற்று இளம்பெண் ஒருவர் தனது கணவர் ஆகாசுடன் காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார்.
அச்சமயம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத்தடுப்புகளை தாண்டி கால்வாய்க்குள் சென்று பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 28 வயது இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை பரிதாபமாக பலியாகினர்.
கணவர் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். மேலும், தனது மனைவி குழந்தைகளை காப்பாற்றக்கூறி அலறிய நிலையில், விபத்தைக்கண்டு வந்த உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் இறங்குவதற்குள், கார் மூழ்கி பெண் மற்றும் அவரின் குழந்தை பலியாகினர்.