மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: திரைப்பட பாணியில், 40-வது தளத்தில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்து விபத்து..!
பழுதுபார்க்கும் பணியின் போது 40 ஆவது தளத்தில் இருந்து லிப்ட் அறுந்து தரைத்தளத்தில் விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் சித்தேஷ் ஜோதி அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பில் இருக்கும் லிப்டை பழுதாகி இருந்துள்ளது.
இதனையடுத்து, இன்று லிப்ட் பழுது பார்க்கும் பணியாளர்கள் தங்களின் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக 40 ஆவது தளத்தில் இருந்து லிப்ட் அறுந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில், 2 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.