மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் என மர்ம நபரிடம் கடலை போட்டு, நிர்வாண புகைப்படம் அனுப்பிய மனைவி.. பேக் ஐ.டி பகீர் சம்பவம்..! தம்பதிகளே உஷார்.!!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் சேட்டிங் செய்வதாக எண்ணிய பெண்மணி மர்ம நபரால் சீட்டிங் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆசாமியை அன்புகொண்ட கணவன் என எண்ணிய மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தீந்தோஷி பகுதியை சேர்ந்த இளம்பெண், இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளார். இவர், தனது கணவர் பெயரில் போலியான இன்ஸ்டா கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்பதை அறியாமல், கணவரிடம் கேட்காமல் அதற்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.
மர்ம ஆசாமி பெண்ணின் கணக்கில் இருந்து நட்பு அழைப்பு வந்ததும் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த 3 மாதமாக இருவரும் பேசி வந்துள்ளனர். ஆசாமி பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை கேட்க, கணவர் தானே என்று எண்ணிய பெண்ணும் தனது நிர்வாண புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் பரவசமடைந்த ஆசாமி, தினமும் பெண்ணை வெவ்வேறு உடைகள் & உள்ளாடைகளை அணியச்சொல்லி, புகைப்படம் எடுத்து அனுப்ப வைத்துள்ளார். விபரமறியா மங்கையும் கணவனை உற்சாகப்படுத்தும் பொருட்டு செயல்பட்டு வந்துள்ளார். இப்படியாக செயல்கள் தினமும் தொடர, ஒருகட்டத்தில் பெண்ணுக்கு இந்த செயல் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, கணவரிடம் எதற்காக தினமும் அந்தரங்க புகைப்படத்தை எடுத்து அனுப்பச்சொல்கிறாய்? என்று கொந்தளிக்கவே, கணவன் என் பெயரில் இன்ஸ்டா கணக்கே இல்லை. நீ யாரிடம் பேசினாய்? என்று கேட்டுள்ளார். அப்போதுதான், பெண்ணுக்கு விபரமே புரியவந்துள்ளது. உண்மையை அறிந்து பதறிப்போன பெண்மணி, கயவன் மிரட்ட தொடங்குவதற்குள் நாம் சுதாரிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் பெண் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபர் பெண்ணின் கணவரின் பெயரில் போலியான இன்ஸ்டா கணக்கு தொடங்கி லீலையில் ஈடுபட்ட மர்ம ஆசாமி என்பதும் உறுதியானது. இன்னொருவரின் மனைவியுடைய அந்தரங்க புகைப்படத்தை பார்த்து ரசித்த காம கொடூரன் கம்பி வைத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.