மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கொரோனா பரவட்டும், நான் சாகிறேன்" - மரணத்திற்காக கவிதை எழுதி தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி.!
2 மாதமாக தனது மரணம் தொடர்பாக கவிதை எழுதிய 8 ஆம் வகுப்பு மாணவி, திடீரென தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், அஜினி சந்திரமணி நகரில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சிறுமி பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில், வீட்டில் தனது அறையில் படித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, மதியம் 1 மணியளவில் மகளை சாப்பிட அழைக்க தாய் மகளின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில், அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அலறியுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துளளனர்.
சிறுமி தூக்கில் தொங்குவதை கண்டு நிலைமையை சுதாரித்தவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் புத்தகத்தை பார்க்கையில், அவர் கடந்த 2 மாதமாகவே தன் மரணம் குறித்து கவிதை எழுதி வைத்தது தெரியவந்தது. அது, "கொரோனா பரவட்டும், நான் சாகிறேன்" என்ற தலைப்பில் இருந்துள்ளது. இவர் பள்ளியில் நன்றாக படிக்க கூடியவராகவும் இருந்துள்ளார். அவரின் கவிதைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.