மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமியுடன் காதல்.. பெற்றோர் எதிர்பால் இரயில்முன் பாய்ந்து ஜோடியாக சாவு.. கண்ணீர் துயரம்..!
சிறுமியை காதலித்த 18 வயது நபர், சிறுமியின் பெற்றோர் எதிர்பால் சிறுமியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், காம்ப்டி பகுதியில் வசித்து வருபவர் ஆதித்யா (வயது 18). இதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தாய் தனது மகளை கண்டித்து இருக்கிறார்.
மேலும், காதலன் ஆதித்யாவை சந்திக்க கூடாது எனவும் தாய் அறிவுறுத்தியுள்ளார். இதனை கேட்காத சிறுமி காதலில் உறுதியாக இருந்த நிலையில், சிறுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஆதித்யா, தன்னை நேரில் சந்திக்க வருமாறு கூறியுள்ளார். சிறுமியும் காதலனை சந்திக்க சென்றுள்ளார்.
இதனையடுத்து, மகள் காதலனுடன் சென்றதை உறுதி செய்த பெற்றோர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமி மற்றும் ஆதித்யாவை தேடி வந்தனர். இந்நிலையில், அங்குள்ள கான்ஹான் நதி மேம்பாலம் கீழேயுள்ள தண்டவாளத்தில் ஆண் - பெண் ஜோடியின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இறந்தது ஆதித்யா மற்றும் சிறுமி என்பதை உறுதி செய்துள்ளனர். இவர்கள் ஹவுரா - மும்பை அதிவிரைவு இரயிலில் மோதி உயிரிழந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.