மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோழியின் கழுத்தை நெரித்து கொலை.. கணவருடன் இளம்பெண் பரபரப்பு செயல்.. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி காரணம்..!
வாங்கிய கடனை பெண்மணி கொடுக்க மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பெண் தனது தோழியை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், கபில் நகரில் வசித்து வரும் பெண்மணி தீபா ஜுகள் தாஸ் (வயது 41). இவர் பள்ளி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் பெண்மணியை தேடி வந்தனர்.
இந்நிலையில், அங்குள்ள உப்பல்வடியில் பிளாஸ்டிக் பையில் பெண்ணின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, இவர் மாயமான பெண்மணி தீபா ஜுகள் என்பது உறுதியானது. இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தீபா இறுதியாக தோழி சுவர்ணா சோனி (வயது 30) என்பவரின் வீட்டிற்கு சென்றது அம்பலமாகவே, அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வாங்கிய கடனை திருப்பி தராத ஆத்திரத்தில், சுவர்ணா சோனி தீபாவை கொலை செய்த பேரதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இதுதொடர்பான வாக்குமூலத்தில், "தீபா ஜுகள் தோழியான சுவர்ணாவிடம் ரூ.1 இலட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திரும்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுவர்ணா தீபாவை வீட்டிற்கு அழைத்து கடனை கேட்ட நிலையில், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுவர்ணா சோனி, தீபாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் நிலைமையை உணர்ந்து கணவர் சாமியிடம் விஷயத்தை தெரிவிக்கவே, அவரின் உதவியுடன் தீபாவின் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து உப்பல்வடி பகுதியில் வீசி சென்றுள்ளனர்" என்பது அம்பலமானது. இதனையடுத்து, கணவன் - மனைவியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.