மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் நிகழ்விடத்திலேயே மரணம், 9 பேர் படுகாயம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டம், ஸபுதரா நெடுஞ்சாலையில், இன்று கோடரி படா பகுதியில் மாருதி கார் குரூஸர் கார் நேருக்கு நேர் மோதி விபத்தியுள்ளது.
இந்த விபத்தில் மாருதி காரில் பயணம் செய்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழந்தது விநாயக் கோவிந்த் (37), யோகேஷ் திலிப் (வயது 18), ரவீந்திர சவான் (வயது 22), ஜிதின் அணில் பாவ்டே (வயது 24) என்பது தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.