என்னுடைய போனின் கேமராவை டேப் போட்டு ஒட்டியுள்ளேன்.! மம்தா பானர்ஜி அதிரடி.! என்ன காரணம்.?



Mamata Banerjee blocked her phone camera

திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நேற்று  நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி  உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதல்-மந்திரி, கோவா முதல்-மந்திரி ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் மொபைலில்  பொருத்தியுள்ளார்கள்.

எனது செல்போனும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இப்போது மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியாத நிலையில் உள்ளேன். பெகாசஸ் செயலி மூலம் ஒட்டு கேட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கவேண்டும். ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்ச நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். 

நான் என்னுடைய போனின் செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டியுள்ளேன். ஏனென்றால் அவர்கள் எல்லாத்தையும் ஒட்டு கேட்கிறார்கள். அது வீடியோவாக இருந்தாலும் சரி ஆடியோவாக இருந்தாலும் சரி. மத்திய அரசையும் இதேபோல் ஒட்டவேண்டும். இல்லாவிட்டால் நாடு அழிந்துவிடும்’ என்று தெரிவித்தார்.