மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சித்திராவின் ஆவியுடன் பேசும் வெளிநாட்டு நபர்..! நடந்தது என்ன..? வைரலாகும் வீடியோ..
நடிகை சித்ராவின் ஆவியுடன் பேசும் வெளிநாட்டு நபர் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ராவின் தற்கொலை தொடர்பாக போலீசார் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் சித்ராவின் மரணம் தற்கொலை இல்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இறந்துபோன நடிகை சித்ராவின் ஆவியுடன் பேசுவதாக கூறி, வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ காட்சியில், அவர் மறைந்த நடிகை சித்ரா பற்றி கூறுவதும், பின்னர் ஒருசில இடங்களில் ஏதோ ஒரு குரல் கேட்க, அது சித்ராவின் குரல்தான் எனவும் அந்த நபர் குறிப்பிடுகிறார். இதனிடையே சித்ரா கூறுவதாக கூறி, அந்த வீடியோவில் சில வார்த்தைகளையும் அவர் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.