மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் மற்றும் மகளுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடித்து தெருவில் ஊர்வலம் நடத்திய கும்பல்! அதிர்ச்சி காரணம்!
பீகார் மாநிலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி கும்பல் ஒன்று தாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் வைஷாலி என்ற கிராமத்தில் திடீரென வீடு புகுந்த கும்பல் ஒன்று 19 வயது இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார், மகளை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல் தாய் மற்றும் மகள் இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், இருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து சென்று அவர்களின் கிராம தலைவரின் முன்னிலையில், இருவரையும் தடியால் தாக்கி, தலை மொட்டையடித்துள்ளனர். இருவரும் பாலியல் தொழில் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து இருவரையும், தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தாயார் மற்றும் மகள் மீது எந்த குற்றவும் இல்லை என்பது உறுதியான நிலையில், கிராம தலைவர் மற்றும், தலை மொட்டையடிக்க தூண்டிய கும்பல் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர்.