ஒரே வருடத்தில் ஜியோ உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கு இவ்வளவு வருமானமா! எத்தனை கோடி தெரியுமா?



mukesh-ambani-from-19-to-13

பிரபல போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு USD 40.1 பில்லியனுடன் 19ஆவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இந்த ஆண்டு USD 50 பில்லியனுடன் 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

2019 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை சமீபத்தில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி உலக அளவில் 13வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 19வது இடத்திலிருந்த இவர் ஒரே ஆண்டில் 6 இடங்கள் முன்னேறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

mukesh ambani

கடந்த ஆண்டு USD 40.1 பில்லியனாக இருந்த சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் 25% கூடி USD 50 பில்லியன்(3.5 லட்சம் கோடி) ஆக வளர்ச்சியடைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இவருக்கு தற்போது ஜியோவின் வருமானமும் அதிகரிக்க துவங்கியதே இதற்கு காரணம். இவரது சகோதரர் அனில் அம்பானி வெறும் 1.8 பில்லியனுடன் 1349 ஆவது இடத்தில் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

mukesh ambani

இந்தியர்களைப் பொறுத்தவரை விப்ரோவின் உரிமையாளர் அசிம் பிரேம்ஜி 36வது இடத்தையும், HCL உரிமையாளர் ஷிவ் நாடார் 82வது இடத்தையும் பிடித்துள்ளனர். உலக அளவில் அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் முதலிடத்தையும், பில்கேட்ஸ் இரண்டாவது மற்றும் வாரன் பஃப்பட் மூன்றாவது இடங்களையும் பிடித்துள்ளனர்.