மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாய்குட்டிகளை கொலை செய்த குரங்குகள் கைது., அடர்வனப்பகுதியில் விடுவிப்பு.!!
நாய்குட்டிகளை கொன்று குவித்த 2 குரங்குகளை அதிகாரிகள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மஜல்கான் லாவூல் கிராமத்தில் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை நாய்க்குட்டிகள் கணிசமாக மக்கள் மத்தியில் தென்பட்ட நிலையில், தற்போது ஒரு நாய்குட்டி கூட தென்படவில்லை.
நாய்க்குட்டிகள் மர்மமான முறையில் உயரமான இடத்தில் இருந்து உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அது குறித்து விசாரணை மேற்கொள்கையில், குரங்குகள் நாய்குட்டிகளை உயரமான இடத்திற்கு தூக்கி சென்று கீழே போடுவது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், நாய்கள் கூட்டமாக சேர்ந்து குட்டி குரங்கை கடித்து உயிரிழக்க வைத்ததால், குரங்குகள் நாய்குட்டிகளை தேடி தூக்கி சென்று உயரமான இடத்தில் இருந்து கீழே போட்டு கொலை செய்கிறது என்று தெரிவித்தனர்.
தற்போது, இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 குரங்குகளும் வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, நாக்பூர் அடர்வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது.