மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுவானில் குலுங்கிய விமானம்.. 12 பயணிகள் படுகாயம்.. விமான பயணத்தில் நடந்த சோகம்.!
ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகம் தாங்க முடியாமல் குலுங்கியதில் 12 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் பகுதிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டுள்ளது. அப்போது ஜெட் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், காற்றின் வேகம் தாங்காமல் குலுங்கியுள்ளது.
இதில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்ட நிலையில், கீழே விழுந்து சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விமானம் சிறிதுநேரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அப்போது காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
மேலும், சிறிய காயங்கள் உடையவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கின்றது.