ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ரீல்ஸ் மோகத்தால் துயரம்; வளைவில் அதிவேகத்தில் திரும்பி இளைஞர் துள்ளத்துடிக்க பலி.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமேனி பகுதியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் எப்போதும் இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யும் திட்டத்துடன் இருந்த கோகுல கிருஷ்ணன், நண்பனுடன் அதிவேகமாக சென்று வளைவு பகுதியில் திரும்பி இருக்கிறார்.
இதனால் வாகனம் அங்கிருந்த வீட்டின் சுவற்றில் மோதி விபத்தில் சிக்க, கோகுல கிருஷ்ணன் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.