மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர்... மாயமான 3 குழந்தைகள்... காருக்குள் சடலமாக மீட்டெடுப்பு... காவல்துறை விசாரணை.!
மகராஷ்டிரா மாநிலத்தில் வீட்டிலிருந்து மாயமான மூன்று சிறு குழந்தைகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் உள்ள பருக் நகர் என்ற பகுதியைச் சேர்ந்த தவ்ஃபிக் கான்(4), அலியா(6), அப்ரின் கான்(6) ஆகிய மூன்று குழந்தைகளும் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு வந்துள்ளனர். மதியம் சும்மா ரெண்டு முப்பது மணியிலிருந்து வெளியே விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் திடீரென மாயமாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் முந்தாநாள் இரவில் இருந்து நேற்று காலை வரை தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளிலும் எந்தவித தடயங்களும் இல்லை . இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த காரை திறந்து பார்த்தபோது காணாமல் போன மூன்று குழந்தைகளும் காருக்குள் சடலமாக இருந்துள்ளனர். இதனைக் கண்டு குழந்தைகளின் பெற்றோர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் கார் மெக்கானிக் கடை இருப்பதால் அங்கு பழுதிற்காக வந்த கார் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் குழந்தைகள் விளையாடும் போது தவறுதலாக காருக்குள் சென்று இருக்கலாம் அப்போது கார் கதவு மூடி அதனை திறக்க முடியாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் மரணமடைந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர் எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை பின்னரே அவர்களது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.