மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்சை பீன்ஸ் விதையை விழுங்கிய குழந்தை மூச்சுத்திணறி பரிதாப மரணம்.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!
3 வயது சிறுமி பீன்ஸ் விதையை விழுங்கியதால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், சுக்காலி பெல்தார் கிராமத்தில் 3 வயது சிறுமி தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், தாய் சமைத்து கொண்டிருந்ததால், சிறுமி வீட்டில் தனியாக விளையாடியுள்ளார்.
அப்போது சிறுமியின் தாயார் உணவிற்காக சமைக்கப்பட்ட பீன்ஸ் பொரியலை குடும்பத்தாருக்கு பரிமாறிய நிலையில், சிறுமி தரையில் கிடந்த சமைக்கப்படாத பீன்ஸ் விதை ஒன்றை சாப்பிடுவதற்காக எடுத்து அதனை விழுங்கியுள்ளார்.
இதன் காரணமாக சிறுமிக்கு உடனடியாக மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பீன்ஸ் விதை விழுங்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.