மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
75 ஆண்டுகளில் காலாவதியான சட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து, CAA & NRC, வேளாண் சட்டம் அமல் மற்றும் வாபஸ் போன்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், காலாவதியான சட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் இறுதிநாளில் உரையாற்றிய பிரதமர் மோடி, "வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு உட்கட்டமைப்பு, முதலீடு, புதுமை மற்றும் உள்ளடக்கம் போன்ற நான்கு விஷயங்கள் தூண்களாக இருந்து வருகிறது.
இதன் மீது நாடு கவனம் செலுத்துகிறது. உலக விநியோக சங்கிலியில் ஸ்திரத்தன்மை கொண்டுவர உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நாம் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலாவதியாகி இருக்கும் சட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என பேசினார்.