"பேட் கேர்ள்" பற்றிய கேள்வி.. கொந்தளித்த ஆர்.கே.செல்வமணி.. "அரைவேக்காட்டுத்தனம்" என ஆவேசம்.!
பிரபல மூத்த பத்திரிகையாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் ஊடகத்துறையினர்.!

என்.டி.டிவியின் மூத்த பத்திரிகையாளர் கமல் கான் மாரடைப்பால் உயிரிழந்தார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ நகரை சார்ந்தவர் கமல் கான். இவர் NDTV -யின் மூத்த பத்திரிகையாளர் ஆவார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளை மக்களுக்கு அம்பலப்படுத்தி, நடுநிலையாளராக செயல்பட்ட பத்திரிகையாளர் என்றும் அவர் அங்குள்ள ஊடக வட்டாரங்களில் போற்றப்படுகிறார்.
நேற்று கமல் கான் உத்திரபிரதேச தேர்தல் தொடர்பான கருத்துக்களை வழங்கியிருந்த நிலையில், பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனையடுத்து, அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
What a shocking , profound loss . Cant believe it … pic.twitter.com/zHMgAhJmcv
— Alok Pandey (@alok_pandey) January 14, 2022
NDTV மூத்த பத்திரிகையாளர் கமல் கானின் மறைவை அவரது மனைவி ருச்சியும் உறுதி செய்துள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஊடகத்தினர், மிகச்சிறந்த மூத்த பத்திரிகையாளரை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த 1960 ஆம் வருடம் பிறந்த கமல் கான் 2022 ஜன. 14 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்துள்ளார்.
कमाल को लेकर दीवानगी ऐसी कि कल रात 9 बजे जब वे TV पर थे, उनकी बातों को एक मित्र मोबाइल पर रिकार्ड कर तभी के तभी भेज रहे थे। तनिक भी अंदेशा नहीं था कि सुबह कमाल हमें हमेशा के लिए छोड़ जाएँगे।
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) January 14, 2022
कमाल आप जहां भी रहेंगे, कमाल रहेंगे। आपकी बातें हम सबके बीच गूंजती रहेगी।#RIPKamalKhan pic.twitter.com/ONasnyjCep