நீட் தேர்வில் மாணவிகளை உள்ளாடைகளை கழற்ற சொன்ன விவகாரம்.! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.!



neet exam issue

நாடு முழுவதும் நீட் தேர்வு, கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது.   தேர்வு மையங்களின் நுழைவுவாயில் பகுதியில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு, முறையான பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் ஆபரணங்கள் எதுவும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், பெல்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை இருந்தது.

இந்தநிலையில், கேரள மாநிலம் கொல்லம்  சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, மாணவிகள் பலர் வேறு வழியின்றி உள்ளாடைகளை அகற்றிவிட்டு தேர்வு எழுதினர்.

இந்த விவகாரத்தால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவிகளின் பெற்றோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு உள்ளாடைகளை கழற்றச் சொன்னதாகக் கூறப்பட்டவர்கள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், உள்ளாடைகளை கழற்றச் சொன்னதாக 5 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.