மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்கில் தொங்கியபடி, உயிருக்கு போராடிய புதுப்பெண்! கணவர் செய்த திடுக்கிடும் செயலால் அதிர்ச்சியில் உறவினர்கள்!
கல்பாக்கம் அருகே கடலூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சத்யவாணி.இவர் நந்தினி என அனைவராலும் அழைக்கப்பட்டார். இவருக்கு நத்தமேடு என்ற பகுதியை சேர்ந்த பாலையா என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. பாலையா ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் .இந்நிலையில் நந்தினி மற்றும் அவரது கணவன் இருவரும் நந்தினி வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு நந்தினி தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரை கண்ட உறவினர்கள் பதறியடித்து நந்தினியை மீட்டு அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றன.ர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் நந்தினி இறந்துவிட்டார் என்ற செய்தி பாலையாவுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார் இதனால் நந்தினி மரணத்தில் அவரது குடும்பத்தினருக்கு பாலையா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நந்தினியின் உறவினர்கள் இதுதொடர்பாக பாலையா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு பாலையாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.