மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா எதிரொலி! வெளிநாட்டு விமான நிலையத்தில் தவிக்கும் புதுமணஜோடி! உருக்கமாக இளம்பெண் வெளியிட்ட வீடியோ!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பல்லபி. இவருக்கு கடந்த 26ம் தேதி சங்கர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்த புதுமணத் தம்பதியினர் கடந்த 12 ம் தேதி மலேசியாவிற்கு தேனிலவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக கடந்த 17ஆம் தேதி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் அவர்கள் பயணம் செய்யவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து அங்கிருந்து விசாகபட்டினம் வர டிக்கெட் வாங்கியுள்ளனர்.
அந்த விமானமும் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் சிங்கப்பூரிலிருந்து அம்ரிஸ்டர் வர டிக்கெட் எடுத்துள்ளனர். ஆனால் அந்த விமானமும் கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இதனாலேயே அவர்களது பணம் முழுவதும் செலவாகி விட்டநிலையில் அவர்கள் செய்வதறியாது விமான நிலையத்திலேயே தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அரசு தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து புதுப்பெண் பல்லபி வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.