மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மொட்டை கடுதாசி... இளம் பெண்களுக்கு ஆபாச கடிதம்... காவல்துறை விசாரணையில் சிக்கிய 3 பேர்.!
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சார்ந்த பெண்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஆபாச கடிதங்கள் அனுப்பி வந்த நபர்களை தீவிரமான விசாரணையின் மூலம் கைது செய்திருக்கிறது காவல்துறை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நூறுநாடு பஞ்சாயத்து உட்பட்ட பகுதியை சார்ந்த முக்கிய நபர்களுக்கும் ஆபாச கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நூறநாடு பஞ்சாயத்து தலைவியான ஸ்வப்னாவிற்கும் ஆபாச கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில் அனுப்புநர் பகுதியில் ஸ்யாம், ஸ்யாம் நிவாஸ், படர்நிலம், நூறநாடு என்ற முகவரி எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக கடிதம் கிடைத்தவர்கள் நூறநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த ஸ்யாம் என்பவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தியது அவர் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காவல்துறையிடம் தெரிவித்தார்.
மேலும் தனக்கு எதிர் வீட்டிலிருக்கும் மனோஜ் தான் தனக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து மனோஜை பிடித்து காவல்துறை விசாரணை செய்தது. அவர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று காவல்துறை அதிகாரிகளிடம் கூறினார் இந்நிலையில் ஸ்யாமின் சகோதரிக்கும் ஆபாச கடிதம் வந்தது. இதனைத் தொடர்ந்து மனோஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மனோஜின் கையெழுத்து மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்களின் கையெழுத்தை காவல்துறையினர் பரிசோதித்து பார்த்தனர். அப்போது கையெழுத்துக்கள் ஒத்துப் போகவில்லை. இதனால் குற்றவாளி யார் என்பதை கண்டறிவதில் காவல்துறைக்கு பெரிய தலைவலி உருவானது. இந்த சூழ்நிலையில் ஸ்யாமின் லதா என்பவருக்கும் ஆபாச கடிதம் வந்தது. அது தொடர்பாக புகார் அளித்த அவர் கடிதத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்தார். அப்போது அந்த கடிதம் வெண்மணி பகுதியில் இருந்து வருவதை காவல்துறையினர் அதில் அச்சிடப்பட்டிருந்த ஸ்டாம்பின் மூலம் கண்டறிந்தனர். இது தொடர்பாக அப்போதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது நடுத்தர வயதுடைய ஒரு மனிதர் அடிக்கடி கடிதங்களை போஸ்ட் பாக்ஸில் போடுவதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை செய்த போது அவரது பெயர் ராஜேந்திரன் என்றும் ஜலஜா என்பவரின் தூண்டுதலால் இந்தக் கடிதங்களை அனுப்பியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜலஜாவை கைது செய்து விசாரித்த போது ஸ்யாம் தான் தனது பக்கத்து வீட்டுக்காரரான மனோஜை சிக்க வைக்க இது போன்ற கடிதங்களை எழுதச் சொன்னதாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்யாமை கைது செய்து விசாரித்த போது தனக்கும் மனோகருக்கும் இருக்கும் சொத்து தகராறு காரணமாக அவரை சிக்கலில் மாட்டி விடுவதற்காக கடிதங்களை எழுதச் சொன்னதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.