#BigBreaking: கோரமண்டல் அதிவிரைவு இரயில் பெரும் விபத்து; பிரதமர் மோடி இரங்கல்., 50 பேர் பலி., 179 பேர் படுகாயம்..! அதிகாரபூர்வ அறிவிப்பு.!



odisha-coromandel-express-accident-50-died-147-injured

 

ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவுடன் தகவல் கேட்டறிந்து உதவி செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்..

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில், சென்னை நோக்கி கொல்கத்தாவில் இருந்து பயணம் செய்த கோரமண்டல் அதிவிரைவு இரயிலும் - சரக்கு இரயிலும் மோதி தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கோரமண்டல் அதிவிரைவு இரயிலின் 7 பெட்டிகள் தடம்புரண்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் தற்போது வரை 179 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் பலியாகியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

odisha

மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், காயமடைந்தோரை மீட்டு அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். பாதிக்கப்படாத மக்கள் பத்திரமாக அருகே உள்ள பெரு நகரங்களுக்கு பேருந்துகளின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் வேதனை அடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. 

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இரயில்வே அமைச்சரிடம் பேசி உரிய பணிகள் நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவித்துள்ளார்.

அவசர அழைப்புகளுக்கு: 033- 22143526/ 22535185,