மீண்டும் விமான நிலையத்தில் வந்து இறங்கிய 89 வயது முதியவர்! அவரை சோதனை செய்தபோது அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



old man in airport

நேற்று முன்தினம் கர்னல் சிங் என்ற 89 வயது முதியவர், ஹாங்காங்கில் இருந்து இந்தியாவிற்கு டெல்லி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமான நிலையத்தில் வழக்கம்போல் விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது அவரது வயதிற்கு ஏற்றாற்போல் இல்லாமல் இளமையாக இருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து முதியவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அதிகாரி ஒருவர் அவரது பாஸ்போட்டை பரிசோதித்துள்ளார். அதில் அவர் பெயர் அவர் பெயர் கர்னல் சிங் வயது 89 என்றும், பிறந்த தேதி 20 அக்டோபர் 1930 என்றும் இருந்துள்ளது. ஆனாலும் அவர் மீது இருந்த சந்தேகத்தால் அதிகாரிகள் அவரை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் 89 வயது நபரைப் போல் வேடமிட்டிருந்தது தெரிய வந்து.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபரின் உண்மையான பெயர் குருதீப் சிங் என்பதும், பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த அவருக்கு வயது 68 என்பதும் தெரியவந்தது. அத்துடன் அவரது உண்மையான பிறந்த தேதி 16 மார்ச் 1951 என்பதும் தெரியவந்தது.

airport

அவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஹாங்காங்கிற்கு சென்றுள்ளார். பலமுறை அந்நாட்டிற்கு சென்றும் அவரால் அங்கு நிரந்தர வாழிட உரிமையை பெற முடியவில்லை. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு கர்னல் சிங் என்ற பெயரில் போலி பாஸ்போட்டை தயார் செய்துள்ளார். அதில் தனது பிறந்த திகதியை மாற்றி ஹாங்காங்கில் நிரந்தர வாழிட உரிமையைப் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது.

இதே போலவே கடந்த திங்கட்கிழமையன்று டெல்லியில் இருந்து நியூயார்க் நகருக்கு செல்லவிருந்த 81 வயது முதியவரை சோதனையிட்டபோது, அவர் 31 வயது இளைஞர் என்பதும், போலி பாஸ்போட்டை கொண்டு வெளிநாடு செல்ல முயன்றதும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.