பெற்றோர்களே உஷார்.. தெரு நாய் கடித்து 4 மாத பச்சிளம் குழந்தை பலி.!



Parents beware.. 4-month-old baby dies after being bitten by a stray dog!

ஹைதராபாதில் சைக்பேட் என்ற பகுதியில் 4 மாத குழந்தை பெற்றோருடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையை அவரது தாய் வீட்டின் உள்ளே தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு அருகில் வேலைக்கு சென்றுள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக தெரு நாய் குடிசை உள்ளே வந்து தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் கடிதுள்ளது. இதனால் குழந்தை அலறி துடிதுள்ளது அந்த  சத்தம் கேட்டு பதறிப்போய் ஓடி வந்த குழந்தையின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

Parents beware

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் தெரு நாய் கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.