திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"கழுதைப்பால் விற்று கோடியில் புரளுங்கள்" - யூடியூப் விளம்பரத்தை நம்பியவர்களுக்கு மொட்டை.. ரூ.100 கோடி மோசடி.!
ஒவ்வொரு நாளும் புதுவிதமான மோசடிகள் நடந்து மக்களின் பணம் ஏமாற்றிச் செல்லப்படும் சோகம் நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் கிராமத்தில் வசித்து வருபவர் பாபு உலகநாதன். இவர் "டாங்கி பேலஸ்" என்ற கழுதை பண்ணையை தொடங்கி, கூட்டாளியாக கிரி சுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை இணைத்துள்ளார். இவர்களின் திட்டப்படி, லிட்டர் அளவிலான கழுதைப்பால் ரூ.1600 முதல் ரூ.1800 வரையில் வழங்குவதாக விளம்பரமும் செய்துள்ளார்.
அதிக லாபம் என விளம்பரம்
யூடியூப் பக்கத்தில் இதுகுறித்த வீடியோவும் வெளியிட்டு வந்தவர், தனக்கு அதிக கழுதைப்பாள் ஆர்டர் கேட்டு வருவதாகவும், அதனை விநியோகம் செய்ய முடியவில்லை என்றும் கூறி பின்தொடர்பாளர்களை நம்ப வைத்துள்ளார். மேலும், கழுதை பால் வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தால், மென்பொறியாளர் வேலைக்கு செல்வதினை காட்டிலும் அதிக இலாபம் எடுக்கலாம் எனவும் அளந்துவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செல்போனால் பறிபோன உயிர்.!! பெயிண்டருக்கு நேர்ந்த கோர முடிவு.!!
ரூ.25 இலட்சம் முதல் கோடி வரை வாரிக்கொட்டிய முதலீட்டாளர்கள்
இந்த விஷயத்தை உண்மை என நம்பி ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மட்டுமல்லாது தமிழ்நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சுமார் இலட்சக்கணக்கில் பணம் அனுப்பி இருக்கின்றனர். பல இடங்களில் முதலீட்டாளர்களில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என ரூ.5 இலட்சம், கழுதை சிகிச்சை முதலீடு ரூ.50 ஆயிரம், கழுதைப்பால் ஒருமணிநேரத்திற்கு மேல் வெயிலில் இருக்க கூடாது என பிரிட்ஜ் வாங்க ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.5 இலட்சம் என தனி உறுப்பினரிடம் இருந்து மொத்தமாக ரூ.25 இலட்சம் முதல் ரூ.1.5 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி மோசடி
இவ்வாறாக மொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்தவர், ஒருகட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்லவில்லை. இதனால் ஹைதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்
இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில், "நெல்லையில் உலகநாதன் குழுவினர் கழுதைப்பால் உற்பத்தி நிறுவனம் தொடங்கி, அதில் இலட்சத்தில் வருமானம் பார்க்கலாம் என சோனிகா ரெட்டி என்ற பெண்ணின் உதவியுடன் யூடியூபில் விளம்பரம் செய்தனர். கழுதைக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சம் வரை வாங்கியவர்கள், பல்வேறு காரணத்தை கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.40 இலட்சம் வரையில் பணம் பிரித்துள்ளனர். முதல் 3 மாத்திற்கு லிட்டர் பாலுக்கு ரூ.1600 வழங்கியவர்கள், பின் இன்று வரை பணம் கொடுக்கவில்லை.
ஏமாற்றப்பட்ட எங்களின் பணத்தை மீட்க ஒன்றரை ஆண்டுகளாக போராடுகிறோம். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் என ரூ.100 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. அரசு பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என வருத்தத்துடன் கூறினர்.
டாங்கி பேலஸ் யூடியூப் பக்கம்திறப்பு விழா குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான வீடியோ..
இதையும் படிங்க: தனியார் பேருந்து - டூவீலர் மோதி பயங்கரம்... நொடியில் பறிபோன கல்லூரி மாணவி உயிர்.! அலறிய பயணிகள்., பதறவைக்கும் காட்சிகள்.!