மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் விமானியின் அறைக்குள் சென்ற பயணி!. அவர் கேட்ட ஒத்த வார்த்தை!. அரண்டுபோன விமான ஊழியர்கள்!.
மும்பை விமான நிலையத்தில், மது போதையில் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட தயாரான நிலையில் நின்றுகொண்டிருந்தது. அப்போது நபர் ஒருவர் திடீரென்று தமது இருக்கையில் இருந்து எழுந்து விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார்.
அவரை விமான ஊழியர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமது மொபைலில் பேட்டரி குறைவாக இருப்பதாகவும், மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் பிடிவாதம் பிடித்துள்ளார். பின்னர் அவரை ஊழியர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விமானியின் அறைக்குள் பயணிகள் எவரும் நுழைய அனுமதி இல்லாத நிலையில், சட்டத்தை மீறியதாக கூறி அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அறிவுரை கூறி விடுவித்தனர்.