மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மளிகைக்கடைக்காரரை கும்மிருட்டு காட்டுக்குள் கதறவிட்ட கும்பல்; இளம்பெண்ணுடன் சிக்கிய 50..! விபரம் உள்ளே.!
புதுச்சேரியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). இவர் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு வரும் பெண்களிடம் காதல் வார்த்தை பேசி மயக்கும் செயலை செய்வார் என கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கருணாகரனின் மளிகைக்கடைக்கு தேடிவந்த வனிதா என்ற பெண்மணி, தனக்கு பெற்றோர் இல்லாத நிலையில், உறவினர்களும் உதவ மறுப்பதால் கல்விக்கு உதவிசெய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
தனக்கு கல்விக்கு உதவி செய்தால், நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் கருணாகரன் பெண்ணிடம் ஆசையாக செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பெண்மணியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கடையொன்றில் குளிர்பானம் சாப்பிட்டுள்ளார். ஆசையாக வந்தவரின் ஆசையை குபீரென ஏற்றிவிட்ட பெண்மணி, ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அரைகுறையாக நின்ற கருணாகரனை, 3 இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்தபடி மிரட்டி ரூ.40 ஆயிரம் ரொக்கம், வங்கிக்கணக்கு வாயிலாக ரூ.75 ஆயிரம் பணத்தை வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் பெண்மணியின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆப் ஆகிய காரணத்தால், அவரை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராமு, அருண்குமார் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் மோசடி சதிச்செயல் அம்பலமானது.
மளிகைக்கடைக்கார் மன்மதனாக, செல்வந்தராக இருந்ததால் பெண்ணை வைத்து திட்டமிட்டு அவரை தங்களின் வலையில் வீழ்த்திய கும்பல், அருண்குமாரின் மனைவி தோழியை கருணாகரனிடம் பழகிவிட்டு பணம்பறிப்பு விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, மேற்கூறிய சம்பவத்தில் அருண்குமார், ராமு, அவரது மனைவியின் தோழி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.