மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மசாஜ் சென்டர் பெயரில் கொடூரம்.. 40 பேரால் சிறுமி பலாத்காரம்.. 18 பேர் கைது.!
புதுச்சேரி மாநிலத்தில் அழகு நிலையம், மசாஜ் சென்டர் பெயரில் ஹைடெக் விபச்சாரம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக உருளையன்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில், சிறுமியை விபச்சாரத்தில் வலுக்கட்டாயப்படுத்தி தள்ளியது அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, 40 பேரால் சிறுமி வெவ்வேறு சூழலில் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 16 பேரை தற்போது வரை அதிரடியாக கைது செய்தனர். எஞ்சியுள்ள 24 பேரையும் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், முதலியார்பேட்டை பகுதியில் வசித்து வரும் தனியார் வங்கி ஊழியர் ராஜ்குமார் (வயது 27), மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் சாப்ட்வேர் எஞ்சினியர் சுரேஷ் (வயது 24) ஆகிய 2 பேரையும் மேற்கூறிய வழக்கின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாகவுள்ள 22 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.