பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுக்கு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது!. அதிரடி உத்தரவு!.
தமிழகத்தில் சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்த நடவடிக்கை செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது போலவே புதுச்சேரியில் சொத்துக்குவிப்பு வழக்கில் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் என்பவர் சமீபத்தில் எம்.எல்.ஏ பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
என்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசோக் ஆனந்தனுக்கு சொந்தமாக ஒரு தனியார் பள்ளி உள்ளது. அசோக் ஆனந்தனுக்கு எந்த பின்னணியும் இல்லாத நிலையில், அதிக அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார் என கூறி சி.பி.ஐ விசாரித்துவந்தது.
இதில் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தை இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்தன் அவர்களின் தொகுதியான தட்டாஞ்சாவடி என்ற தொகுதி காலியான தொகுதியாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்தன் இனிவரும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.