மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: புதுச்சேரி சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரம்: நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (வயது 57) ஆகிய இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.20 இலட்சம் இழப்பீடு வழங்கியது. அதனைத்தொடர்ந்து சிறுமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் மரண விவகாரம் தற்போது அம்மாநில எதிர்கட்சிகளால் பேசுபொருளாக்கப்பட்டுள்ள நிலையில், கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் புழங்குவதே இதற்கு காரணமாக அமைந்தது என்றும் குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.
நாளை (மார்ச் 08) புதுச்சேரி மாநில எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் பெரும்பாலான பள்ளிகள் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் சார்பில் மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு நாளை பள்ளிகள் செயல்பாடாது எனவும் கூறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.