அரசு அதிகாரிகளின் கூட்டத்தில் ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானதால் பரபரப்பு!



Porn video played in jaipur secretariat

ஜெய்ப்பூரில் நடைபெற்ற உணவு மற்றும் நுகர்பொருள் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரின் தலைமை செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அந்த துறையின் தலைமை அதிகாரி முக்தா சிங்க் தலைமையில் நடைபெற்றது.

Jaipur secretariat

இந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி ஆலோசிப்பதற்காக தலைமை செயலகத்தில் 10 அதிகாரிகள் ஒரு அறையில் கூடியுள்ளனர். மேலும் 33 மாவட்டங்களை சேர்ந்த நுதர்பொருள் விநியோக அதிகாரிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தல் கலந்துகொண்டனர்.

Jaipur secretariat

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, வீடியோ கான்பரஸ் திரையில் திடீரென ஆபாச வீடியோ ஒன்று ஒளிப்பரப்பாகியுள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமை அதிகாரி இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.