மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழன் அபிநந்தனால் நாட்டுக்கே பெருமை பிரதமர் மோடி புகழாரம்.!
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இன்று கன்னியாகுமரி வந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி: ஜெயலலிதாவின் ஆட்சியின் கீழ் தொலைநோக்கு பார்வையுடன் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைப்பெற்றுள்ளன. அவரின் மறைவுக்கு பின்னரும் அது தமிழகத்தில் பழனிச்சாமியின் கீழ் நடைப்பெற்று வருகின்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விமானப்படை வீரன் அபிநந்தனும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதமளிக்கிறது என்றார். மேலும், மதுரை -சென்னை இடையே தேஜஸ் விரைவு ரயில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வாரத்தில் வியாழக்கிழமை தவிர 6 நாட்களும் இயக்கப்படும். மதுரையிலிருந்து கிளம்பி திருச்சிக்கு முன்னர் கொடைரோட்டில் மட்டும் நின்று செல்லும் என்று தெரிவித்தார்.