மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவல்நிலையத்தில் பரபரப்பு .கைதியின் கொடூர செயலால் காவலர்களுக்கு நேர்ந்த விபரீதம், வெளியான பதறவைக்கும் வீடியோ .!
காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், இருபோலீசாரை கோடாரியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் காவல் நிலையத்தில் விஷ்ணு ராஜாவட் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர் .
மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யாமல்,லாக்கப்பில் அடைக்காமல் வெளியே அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் விஷ்ணு என்ற இளைஞன் அங்கிருந்த கோடாரியை எடுத்து காவல் நிலையத்தில் பணியில் இருந்த கான்ஸ்டபிள் உமேஷ் பாபு மற்றும் கஜராஜ் சிங் ஆகியோரை கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இரு காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் உமேஷ் பாபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
கஜ்ராஜ்க்குதொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மேலும் போலீஸார் தாக்கிய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.