மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
70 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமி : 7 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்.!
வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொள்ள, 7 மணிநேர போராட்டம் வெற்றி அடைந்ததை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தௌசா மாவட்டம், அப்பனெரி கிராமத்தில் வசித்து வரும் சிறுமி அங்கிதா. இவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, வீட்டின் அருகே இருந்த 200 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்துள்ளார். மகள் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளதை கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மீட்பு படையினருக்கு தகவலை தெரிவித்த அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சிறுமி 70 அடி ஆழத்தில் சிக்கியிருந்த நிலையில், 7 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள், அங்கு தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோர் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.