மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலித் இளம்பெண் வீடுபுகுந்து பாலியல் பலாத்காரம்.. குற்றத்தை மறைக்க தீயிட்டு கொளுத்திய கொடூரம்..!
30 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கயவனால் உயிருக்கு போராடி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மாவட்டத்தில் தலித் பெண்மணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
30 வயதாகும் அந்த பெண்மணி தனது வீட்டில் வசித்து வந்த நிலையில், அதே கிராமத்தைச் சார்ந்த சாகுர்கான் என்பவர் திடீரென பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை மிரட்டிய சாகுர்கான் போலீசில் புகார் கொடுக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.
அதற்கு பெண்மணி ஒத்துழைக்காததால் அவரை வீட்டிலேயே வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் 50% தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.