மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் தகராறு; அண்ணன்-தம்பிகள் பகையாளியானதால் கோடரியால் வெட்டிக்கொலை.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டம், ஜஹிரி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தவாரா பீல் (வயது 38). இவரின் இளைய சகோதரர் மனோஜ் பீல் (வயது 30).
இவர்கள் பிறப்பால் உடன்பிறந்த அண்ணன் - தம்பியாக இருந்தாலும், விரோதிகளை போல செயல்பட்டு வன்மத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே இருசக்கர வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக தகராறு எழுந்துள்ளது. அச்சமயம் வாக்குவாதம் முற்றியதில் மூத்த சகோதரர், கோடரியை எடுத்து வந்து தம்பியை தாக்கி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் இந்த சம்பவத்தில் மனோஜ் நிலைகுலைந்து விழ, அவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மனோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலையை அரங்கேற்றிய சன்வாரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.