அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
நொடிப்பொழுதில் ஏற்பட்ட பள்ளம்.. 5 பேர் மீது விழுந்த டூ வீலர்.. பரபரப்பு வீடியோ வைரல்.!
சாலையோர நடைமேடையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் 5 பேர் விழுந்து உயிர் தப்பினர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இருசக்கர பழுதுநீக்கம் செய்யும் கடையில் 4 இளைஞர்கள் நின்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் மட்டுமே கீழே அமர்ந்து வாகனத்தின் பழுதை கவனித்துக்கொண்டு இருக்கிறார்.
அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக இளைஞர்கள் நின்று கொண்டு இருந்த கான்கிரீட் மேடையானது திடீரென இடிந்து விழுந்துவிடவே, அதன் மீது இருந்த ஐவரும் பள்ளத்தில் விழுந்தனர்.
இவர்களின் மேலே இருசக்கர வாகனமும் விழுந்தது. நல்லவேளையாக இவ்விபத்தில் பெரிய அளவிலான காயம் ஏதும் ஏற்கப்படவில்லை. லேசான சிராய்ப்பு காயத்துடன் அனைவரும் உயிர்தப்பினர்.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பிற கடை பணியாளர்கள் அனைவரையும் மீட்டனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.