#Accident: டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சோகம்.. 5 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!



Rajasthan Udaipur Accident 5 Died 13 Injured

சாலையில் சென்ற டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள், தங்களின் குடும்ப விழாவுக்காக அருகேயிருக்கும் மற்றொரு கிராமத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் டிராக்டரில் பயணம் செய்துள்ளனர். 

பின்னர், அங்கிருந்து மீண்டும் தங்களின் கிராமத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், உதய்ப்பூர் - ஜோலால் சாலையில் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், டிராக்ட்ரில் பயணித்த 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

rajasthan

மேலும், 13 பேர் படுகாயமடைந்து உயிருக்கு அலறித்துடித்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.