#Breaking: சட்டப்பேரவையில் மெகா சம்பவம்.. "யார் அந்த சார்?" - அதிமுகவினர் பேட்ச் அணிந்து வருகை.!



AIADMK MLA Arriving TN Assembly With Yaar Antha Sir Batch Who Is Sir 

 

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 15 க்கும் மேற்பட்ட நிலுவை வழக்கு கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் (வயது 37) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்தனர். 

வெளியான எப்.ஐ.ஆர்

இதனிடையே, மாணவி எப்.ஐ.ஆர் தகவல் அறிக்கை வெளியான நிலையில், அதில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும்போது, நான் அழைக்கும்போதெல்லாம் போனில் பேசும் சாருடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த சார் யார்? என்ற விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே பரபரப்பு... 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது..!

AIADMK

யார் அந்த சார்?

அரசியல் அல்லது தொழிலதிபர் பின்னணி இருக்கலாம் என்ற காரணத்தால், எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக, நாதக, பாமக உட்பட பல்வேறு கட்சிகள் அந்த சாரை விரைந்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வருகிறது. இதனால் அண்ணா பல்கலை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இன்று காலை பல்கலை., வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
 
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு வருகை தந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் யார் அந்த சார்? என்ற பேச் ஒட்டி இருக்கின்றனர். இதனால் அதிமுகவினர் சட்டப்பேரவைக்குள் யார் அந்த சார்? கேள்வியை எழுப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஆளுநரின் உரையுடன் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், ஆளுநர் பேசியதற்கு பின்னர் அரசிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பும் வகையில் பேட்ச் அணிந்து வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே பரபரப்பு... 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது..!