கொரோனா ஊரடங்கு இந்திய வீரர்களுக்காக வரவேற்கப்பட வேண்டிய ஓய்வு! ரவி சாஸ்திரி என்ன சொல்கிறார்?



Ravisathiri talk about corona

கொரோனாவால் கட்டாயமாக கிடைத்துள்ள இந்த இடைவேளி இந்திய அணி வீரர்கள் புத்துணர்வு பெறுவதற்கான வரவேற்கபட வேண்டிய ஓய்வு என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2020 ஒலிம்பிக் போட்டியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடினார்கள். அதன்பிறகு எந்த ஒரு போட்டியும் நடைபெறவில்லை.

cricket

இந்த ஓய்வு அவசியமானது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்  அவர் பேசுகையில், கடைசியாக ஆடிய ஆட்டங்களில் இந்திய வீரர்கள் மனதளவில் சோர்வடைந்தனர். மேலும் உடல்தகுதி பிரச்சினை, சிறு சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்த சூழலில் அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த ஓய்வு நல்ல விஷயம் தான் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய ரவிசாஸ்திரி, கடந்த 10 மாதங்களாக இந்திய அணி வீரர்கள் அதிக அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளனர். சில வீரர்கள் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடியிருப்பார்கள். இதனால் அவர்களின் சுமையை நினைத்து பார்க்க முடியும். அதனால் இன்றைய சூழ்நிலை கடினம் என்றாலும், வீரர்களுக்காக இது வரவேற்கக்கூடிய ஓய்வு என கூறியுள்ளார்.