மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீவிரவாத அச்சுறுத்தல்! குவிக்கப்படும் போலீசார்! உச்சகட்ட சோதனையில் பொது இடங்கள்!
இந்தியா முழுவதும் நாளை குடியரசுதினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறை கூறியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒருபடியாக தமிழகதின் விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசுதின பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாடு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் போலீசாரின் சோதனைக்கு பிறகே பொதுமக்கள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல பேருந்து நிலையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க மோப்ப நாய்கள் கொண்டு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.