மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. காட்டுப்பகுதிக்குள் சிறுவனை கவ்விக்கொண்டு சென்று கடித்து குதறிய சிறுத்தை..!
உத்திரபிரதேச மாநிலம் பல்ராம்பூரி பகுதியை சேர்ந்த சிறுவன் தனது தாத்தாவுடன் சோஹெல்வா காட்டுப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று இருவரையும் தாக்கியுள்ளது.
பின்னர் அந்த சிறுத்தையானது சிறுவனை கவ்விக்கொண்டு காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்று கடித்து குதறி கொன்றுள்ளது. இதனையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வருவதற்குள் சிறுத்தையானது காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.
இந்நிலையில் சிறுவனது உடலானது காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனை முடிவைப் பொறுத்து சிறுவனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.