மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சட்டவிரோத குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை!.. 45 குழந்தைகள் மீட்கப்பட்டனர்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை கடற்கரையோர பகுதியில் பெத்தேல் நற்செய்தி தேவாலயத்தால் நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகம், சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படுகிறது .
இந்த காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் குழந்தைகள் காப்பகம் சட்ட விரோதமாக நடத்தப்பட்டது தெரியவந்ததால், காப்பகத்தில் இருந்த 45 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
மேலும் காப்பகத்தை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்டது. நவி மும்பையில் இருக்கும் பெத்தேல் நற்செய்தி தேவாலயத்தால் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 45 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார்கள் எழுந்ததால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.