மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: ஒரு செல்போனிற்க்காக சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்!! பதறவைக்கும் வீடியோ காட்சிகள்..
பெண்ணின் செல்போனை பறிக்கும் முயற்சியில் அந்த பெண் 200 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.
இரண்டு பேர், ஒரு பெண்ணின் மொபைல் போனை பறிக்கும் முயற்சியில் அந்த பெண்ணை தங்கள் ஸ்கூட்டியின் பின்னால் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளனர். டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது.
அதிர்ச்சியூட்டும் இந்த காட்சியில், இரண்டு கொள்ளையர்கள் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு சாலையின் தவறான பக்கத்தை கடப்பதைக் காட்டுகிறது. பின்னர் அந்த நபர்களால் இழுத்துவரப்பட்ட பெண் நடு ரோட்டில் மயக்கி விழுகிறார்.
சாலையில் மயக்கி கிடந்த அந்த பெண்ணுக்கு உதவி செய்ய அருகில் இருந்தவர்கள் ஓடுகின்றனர். மேலும் அந்த பகுதியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அந்தப் பெண் ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணிபுரிகிறார். அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Delhi: shocking case of crime against women, a snatcher dragged the victim, for almost 200 meters incident happened at Shalimar Bagh area. @priyanktripathi @bhavatoshsingh @CPDelhi @DelhiPolice @LtGovDelhi pic.twitter.com/Nm07E6QY25
— Sanjay Jha (@JhaSanjay07) December 17, 2021