பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! இனி ஓடும் ரயிலிலும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம்! எப்படி தெரியுமா?



shopping-in-running-train-new-announcement

ஓடும் ரயிலில், பயணியர் ஷாப்பிங் செய்யும் வசதி வரும் புத்தாண்டில் இருந்து துவங்கப்பட உள்ளதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நீண்ட நேர பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரயிலை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரயில்பயணத்தின் போது,தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல மறந்த பயணியரின் வசதிக்காக, ரயிலிலேயே ஷாப்பிங் செய்யும் திட்டத்தை, மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் இதற்காக 16 அதிவிரைவு தொடர்வண்டிகளில், "ஷாப்பிங்" வசதியை அறிமுகம் செய்ய , தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

ஷாப்பிங் செய்ய விரும்புவர்கள் ரயிலில் சீருடை அணிந்த இரண்டு விற்பனையாளர்கள் கொண்டு வரும் பல  பொருட்கள் அடங்கிய, டிராலியில் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுகொள்ளலாம். 

மேலும் அந்த டிராலியில் விற்பனையாளர்கள் சமையலறை சாதனங்கள், உடற்பயிற்சி கருவி, அழகு சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வருவர். பயணியருக்கு பொருட்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலும் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திட்டம் வரும் ஜனவரி முதல் வாரத்தில், மும்பையில் இருந்து இயக்கப்படும் 2 தொடர்வண்டிகளில்அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.