மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த 14 வயது அதிசய சிறுவன்.!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹலகார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மூன்றாம் தேதி வீட்டிற்கு பின்புறம் சென்றபோது பாம்பு சிறுவனை கடித்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வந்த அடுத்த சில மணி நேரங்களில் சிறுவனை பாம்பு மீண்டும் கடித்துள்ளது. இதில், 6 முறை பாம்பு கடித்துள்ள நிலையில் 3 முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.
இதனால் தனது மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என பயந்த பெற்றோர் வேறொரு ஊருக்கு குடியேறினர். ஆனால் அங்கும் சிறுவனை பாம்பு 2 முறை கடித்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சிறுவன் வீடு திரும்பினார்.
அதன்படி சிறுவனை இதுவரை பாம்பு 9 முறை கடித்துள்ளது. தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 9 முறை உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.